ஜெயலலிதா குணம் அடைய வேண்டி தமிழ் திரையுலகம் சார்பில் விசேஷ யாகம்

Bookmark and Share

ஜெயலலிதா குணம் அடைய வேண்டி தமிழ் திரையுலகம் சார்பில் விசேஷ யாகம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடந்து வருகிறது. தமிழ் திரைப்படத்துறையினரும் 2 நாட்கள் விசேஷ பூஜை மற்றும் பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.

இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று காலை தொடங்கியது. திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சி.கல்யாண் ஏற்பாட்டில் நடந்த இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியை 30 சிவன் கோவில்களில் இருந்து வந்திருந்த 30 சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். 2 லட்சத்து 25 ஆயிரம் வேத மந்திரங்களை ஓதி விசேஷ பூஜையை அவர்கள் செய்தனர்.

இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, நிர்வாகிகள் டி.சிவா, கதிரேசன், டி.ஜி.தியாகராஜன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கங்காராஜ், மற்றும் காட்ரகட்ட பிரசாத், ஆனந்தா எல்.சுரேஷ், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நடிகர்கள் மனோபாலா, ரமேஷ் கண்ணா, பெப்சி சார்பில் செல்வராஜ், சந்திரன், கிரிசன், மற்றும் தயாரிப்பாளர்கள் சிவசக்திபாண்டியன், மைக்கேல் ராயப்பன், அருள்பதி, கோபாலதாஸ், சிவஸ்ரீ சீனிவாசன், ஆனந்தா எல்.சுரேஷ், ஜாகுவார் தங்கம் உள்பட திரையுலகை சேர்ந்த பலர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
இன்று காலை முதல் மாலை வரை வேள்வி யாகங்கள் நடக்கின்றன. இதிலும் திரையுலகினர் கலந்துகொள்கிறார்கள். 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions