ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம், தேவதை: நடிகை சரோஜா தேவி உருக்கம்

Bookmark and Share

ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம், தேவதை: நடிகை சரோஜா தேவி உருக்கம்

ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம், தமிழக மக்களின் தாய் போன்றவர் என நடிகை சரோஜா தேவி தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது தோழி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறகையில், ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம்.

தமிழக மக்களுக்கு எல்லாம் தாய் போன்றவர். ஷூட்டிங்குக்கு வரும்போது தேவதை போல வருவார் ஜெயலலிதா. என்னிடம் கன்னடத்தில் தான் பேசுவார். சிறு சிறு வேடங்களில் நடித்து உங்களை இறக்கிக் கொள்ளாதீர்கள் என்று கூறுவார்.

சிறைக்குப் போய் விட்டு திரும்பியபோதும் அதே முகத்தோடு, புன்னகையோடு வந்தவர் ஜெயலலிதா. என்னென்ன கஷ்டம், அவமானத்தை அனுபவித்தார் ஜெயலலிதா என்றார்.


Post your comment





Related News
ஸ்ரீதேவிக்கு தன் மகளால் இப்படி ஒரு சோதனையா? அழும் நிலைக்கு வந்தாரா!
`அம்மா' என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்
சுசித்ராவை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவரும் புகார்
மறைந்த இசை மேதை மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு தேவிஸ்ரீ பிரசாத் சிறப்பு அஞ்சலி
ஆஸ்கர் 2017...வயோலா டேவிஸ், மஹேசர்லா அலிக்கு சிறந்த துணை நடிகர் விருது!
அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்
ஸ்ரீதேவி மகள் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions