திரைப்பட விருது விழா பிரமாண்டமாக நடத்தப்படும்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

Bookmark and Share

திரைப்பட விருது விழா பிரமாண்டமாக நடத்தப்படும்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் இன்று சுற்றுச்சூழல், வனத்துறை, தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை எழுதுபொருள் மற்றும் அச்சு ஆகிய துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

அப்போது வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ.யும், நடிகருமான சந்திரசேகர் (தி.மு.க.) பேசியதாவது:-

திரைப்பட நடிகர் - நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது சின்னத்திரை கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்படவில்லை. குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- உறுப்பினருக்குத் தெரியுமோ, தெரியாதோ. முந்தைய தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, மூன்று ஆண்டுகளுக்கு காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்குகின்ற விழா நடை பெறவேயில்லை.

அதன் பின்னர் நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான், எல்லாவற்றிற்குமாகச் சேர்த்து ஒரு பெரிய விழாவை நடத்தினோம்.

அதைப்போலவே பல காரணங்களினால் திரைப்படக் கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு பிரமாண்டமான விழா நடத்தப்படும், விரைவில் அந்த விருதுகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் சின்னத்திரை கலைஞர்களுக்கு முதன் முதலாக விருதுகள் அறிவிக்கப்பட்டது என்னுடைய ஆட்சிக் காலத்தில்தான் என்பதையும் அவருக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

வாகை சந்திரசேகர்:- பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு கடற்கரையில் நினைவிடம் உள்ளது. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அரசியலுக்கு அப்பாற்பட்டு திரையில் சிறப்பாக வசனங்களை பேசி தமிழுக்கு பெருமை சேர்த்தார். சிறப்பு மிக்க அவருக்கு இதே கடற்கரையிலேயே சிலை தொடர்ந்து இருக்கும்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை தற்போது இருக்கின்ற இடத்தைவிட்டு மாற்ற வேண்டுமென்பது இந்த அரசின் விருப்பம் அல்ல. அது நீதிமன்றத்தின் உத்தரவு.

அதை அகற்றியே ஆக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. தீர்ப்பளித்துவிட்டு, திரும்பத் திரும்ப அரசை அழைத்து, இன்னும் ஏன் அதை அகற்றவில்லை என்று உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆகவே, சிவாஜி கணேசனுக்காக, அவர் நினைவைப் போற்றும்வகையில், ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்படும் என்று ஏற்கெனவே இந்த அவையில் நான் அறிவித்திருக்கிறேன்.

அந்த நினைவு மண்டபம் கட்டி முடிக்கும்போது, சிலை அங்கே மாற்றப்படும் என்று சொல்லித்தான் உயர் நீதிமன்றத்தை சமாதானப்படுத்தியிருக்கிறோம். ஆகவே, அது இந்த அரசின் விருப்பம் அல்ல. நீதிமன்றத்தின் உத்தரவு என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

வாகை சந்திரசேகர்:- சிவாஜி சிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- உறுப்பினருக்கு திரைப்படத் துறையைப்பற்றியும், நடிப்பைப்பற்றியும் தெரிந்த அளவிற்கு, சட்டத்தைப் பற்றி அவருக்குத் தெரியவில்லைபோல் தெரிகிறது.

ஆகவே, அவர் வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு போட்டு, சிலை அங்கேயே நீட்டிக்க அனுமதி பெற்றால், அதைச் செய்ய நாங்கள் தயார்.

இவ்வாறு ஜெயலலிதா பதில் அளித்தார்.


Post your comment





Related News
சசிகலா குடும்பம் தனக்கெதிராக சதி செய்கிறது... சோவிடம் சொன்ன ஜெயலலிதா- துக்ளக்
”பினாமி குயின் சசிகலா” , 5 ஆயிரம் கோடி அதிர்ச்சி ரிப்போர்ட் வைரலாக பரவும் காணொளி
ஜெயலலிதா மரணம்..! அப்பல்லோ மருத்துவமனை, சசிகலா நடத்திய நாடகம்..? அதிர்ச்சி தகவல்..!
ஜெயலலிதாவின் மரணம் விஜய்யை எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள்!
இசைஞானியின் குரல்வளத்துடன் வர்ஷன் பாடிய அம்மா இரங்கல் பாடல்
நடிகையாக இருந்த போது எனக்கு தாலாட்டு பாடியவர் ஜெயலலிதா: பெண் தொழிலாளி நெகிழ்ச்சி
இந்தியா தனது வீரப்புதல்வியை இழந்துவிட்டது.. ஜெ. மறைவுக்கு ரஜினி இரங்கல்
இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர்!- ஜெயலலிதாவுக்கு அஜித் இரங்கல்
துரோகங்கள், தாக்குதல்களுடன் அரசியல் பயணத்தை தொடங்கி இரும்புப் பெண்மணியாக மறைந்த ஜெயலலிதா
ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல்... லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions