சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்த ஜெயலலிதா... வைரலாகும் வளர்மதியின் பழைய பேச்சு!

Bookmark and Share

சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்த ஜெயலலிதா... வைரலாகும் வளர்மதியின் பழைய பேச்சு!

சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசிய பழைய பேச்சு இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

தம்மை ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக காட்டிக் கொண்டவர் வளர்மதி. ஜெயலலிதா சிறைக்குப் போன போது குய்யோ முறையோ என கூப்பாடு போட்டு அழுது அமைச்சர் பதவி ஏற்றவர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தீச்சட்டி, மண்சோறு என ஏகத்துக்கும் பில்டப் கொடுத்தவர் வளர்மதி. ஆனால் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது வளர்மதி சிரித்து பேசிக் கொண்டிருந்தது சலசலப்பை கிளப்பியது.

அதன் பின்னர், சசிகலா அப்ரூவராகியிருந்தால் ஜெயலலிதா சிறைக்கு போயிருப்பார் என பேசிய பேச்சு அதிமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. சசிகலாவுக்கு ஜால்ரா அடித்ததால் தற்போது பாடநூல் கழகத் தலைவராக்கப்பட்டிருக்கிறார் வளர்மதி.

இந்த நிலையில் தற்போது வளர்மதியின் பழைய பேச்சு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து ஜானகி அணியில் வளர்மதி இருந்தார்.

அப்போது, சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா; என்னோடு ஒரே மேடையில் அரசியலை பற்றி விவாதிக்க ஜெயலலிதா தயாரா? என ஏகத்துக்கும் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த அறிக்கையை தேடிப் பிடித்த நெட்டிசன்கள் இப்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். வழக்கம்போல வளர்மதியின் இந்த பேச்சையும் வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

 


Post your comment





Related News
4 ம் தேதியே என் ஷூட்டிங்கை கேன்சல் பண்ண சொன்னாங்க! நடிகர் மனோபாலா திடுக்கிடும் தகவல்
ஜெயலலிதாவை நானும் விஜய்யும் ஏன் சந்தித்தோம் தெரியுமா? எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
ஜெயலலிதா தெரிந்து தான் முன்பே இப்படி அதிரடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோ
அஜித்தை பார்த்து ஜெயலலிதா கேட்ட கேள்வி! பதில் விவேகம் போஸ்டரில்
பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?
ஜெயலலிதாவை அழ வைத்த எம்.ஜி.ஆர். – நெஞ்சை உருக செய்த சம்பவம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions