5 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா சசிகலாவை பொதுக்குழுவில் திட்டிய தினம் இன்று!

Bookmark and Share

5 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா சசிகலாவை பொதுக்குழுவில் திட்டிய தினம் இன்று!

சசிகலாவை கட்சியைவிட்டு நீக்கப்பட்டபிறகு நடந்த 2011 பொதுக்குழுவில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா திட்டிய தினம் இன்று!

2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ஜெயலலிதாவிடம் இருந்து அதிரடியாக அறிவிப்பு ஒன்று வெளியானது.

அதில் சசிகலா மற்றும் அவரது உறவுகளை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார். ‘வி.கே.சசிகலா, எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், எம்.பழனிவேல், தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

இந்த அறிவிப்பு வந்த 11-வது நாள் அதாவது 2011 டிசம்பர் 30-ம் தேதிதான் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவில் சசிகலா நீக்கம் பற்றிய பேச்சுகள் பரபரப்பை கிளப்பின. அதில் பேசிய ஜெயலலிதா ‘‘துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது’’ என்றார். அப்போது ஜெயலலிதா என்ன பேசினார். அந்த பேச்சு அப்படியே ரிப்பீட்டு!‘‘அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு.

கட்சிக்காரர்களிலும் பலவிதம் உண்டு. இவர்களில் சிலர் தவறு செய்கின்றனர். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்படும் ஒரு சிலர், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்ற முடிவுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவர்.

ஒரு சிலர் வேறு கட்சியில் சேர்ந்துவிடலாம் என முடிவு எடுப்பர். தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக இன்னொரு கட்சியில் சேர்வதில் நாம் தவறு காண முடியாது. ஆனால், இன்னும் சிலரோ கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, ‘நாங்கள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடுவோம்.

எனவே எங்களைப் பகைத்துக்கொண்டால் நாங்கள் மீண்டும் கட்சியில் இணையும்போது உங்களைப் பழிவாங்கிவிடுவோம’ என்று மிரட்டுபவர்களாக இருப்பார்கள். இவ்வாறு கட்சித் தலைமையின் முடிவின்மீது சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அத்தகையவர்களின் பேச்சை நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சியினருக்கும் மன்னிப்பே கிடையாது’’ என முழுங்கினார் ஜெயலலிதா இதெல்லாம் மூன்று மாதங்கள்தான் ‘‘அக்காவுக்குத் துரோகம் செய்த உறவுகளின் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன்.

அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை’ என சொன்ன சசிகலாவை திரும்ப சேர்த்துக் கொண்டார். ஆனால் அவர் உறவுகளை சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீதான நடவடிகை தொடரும் என சொல்லியிருந்தார் ஜெயலலிதா. ‘‘அரசியல் ஆசை இல்லை’’ என்று சொன்ன சசிகலாதான் இப்போது பொதுச் செயலாளர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்கள்தான் சசிகலாவை சுற்றி இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.


Post your comment

Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வீடியோ பொய், வெளிச்சம் போட்டு காட்டிய பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே.!
ஜெயலலிதாவுக்கு இதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டது! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
4 ம் தேதியே என் ஷூட்டிங்கை கேன்சல் பண்ண சொன்னாங்க! நடிகர் மனோபாலா திடுக்கிடும் தகவல்
ஜெயலலிதாவை நானும் விஜய்யும் ஏன் சந்தித்தோம் தெரியுமா? எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions