ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி

Bookmark and Share

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை பிடிக்க தமிழக அரசியலில் போட்டி நடந்துவருகிறது. அவருடன் இருந்தவர்கள் தொடங்கி அவரின் சொந்தகாரர்கள் வரை அனைவரும் களத்தில் உள்ளனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா இன்று புதிய அமைப்பு ஒன்றை தொடங்கிவிட்ட நிலையில், அதன் கொடியையும் இன்று வெளியிட்டார். தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரை லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா ஒரு கேள்வி கேட்டுள்ளார்..

"ஜெ தீபா, உங்களுக்கு அத்தையின் (ஜெயலலிதா) சொத்துக்கள் வேண்டும், அத்தையின் கட்சி வேண்டும், அத்தையின் பதவிவேண்டும்.. அத்தைக்கு கிடைத்த தண்டனை மட்டும் உங்களுக்கு வேண்டாமா. அத்தையின் வாரிசுதானே..? உங்கள் அத்தையை ஊழல் செய்த குற்றவாளியென உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த அதே நாளில், அதை ஒரு பெருமையாக நினைத்துக் கொண்டு உங்களால் எப்படி அரசியல் பிர(வேஷம் ) செய்ய முடிகிறது. உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் அந்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை அவருக்கு பதிலாக நீங்கள் அனுபவித்து உங்கள் தலைவி மீதுள்ள களங்கத்தை போக்கிவிட்டு அரசியலுக்கு வாருங்கள்... மக்களை ஏமாற்றாதீர்கள்" என கூறியுள்ளார் ஜீவா.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions