ஜெயலலிதாவுக்கு இசை அமைப்பாளர் தேவா நன்றி

Bookmark and Share

ஜெயலலிதாவுக்கு இசை அமைப்பாளர் தேவா நன்றி

வறுமையில் வாடும் பழம் பெரும் இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனுக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற தலைவரும், இசையமைப்பாளருமான தேவா ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திரைப்பட இசையமைப்பாளர் கோவர்தனின் வறுமை நிலையினை மனதில் கொண்டு, தாயுள்ளத்தோடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியிருப்பது, மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இசை குடும்பத்தினர் மீது எந்த அளவுக்கு கருணையும், பற்றுதலும் கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது.இந்த பேருதவி செய்ததற்கு ஒட்டுமொத்த இசை குடும்பங்களின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தேவா கூறியிருக்கிறார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions