ஜெயலலிதாவிற்கு செப்டம்பர் 22 தேதியே அப்பல்லோ மருத்துவமனையில் இறுதிச் சடங்கு நடைபெற்றதாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவும் வீடியோ !

Bookmark and Share

ஜெயலலிதாவிற்கு செப்டம்பர் 22 தேதியே அப்பல்லோ மருத்துவமனையில் இறுதிச் சடங்கு நடைபெற்றதாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவும் வீடியோ !

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு செப்டம்பர் 22 தேதியே அப்பல்லோ மருத்துவமனையில் இறுதிச் சடங்கு  நடைபெற்றதாக காணொளியுடன் ஒரு தகவல் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வருகிறது .தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி சிகிச்சைக்காக  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வந்தது.மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற ஆளுநர்., அரசியல் கட்சி தலைவர்கள்., முக்கிய பிரபலங்கள். ஜெயலலிதாவின் இரத்த சொந்தமான அவரது உடன் பிறந்த அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, உள்ளிட்ட எவரையும் சசிகலா, இளவரசி குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது .

இந்த சூழலில் ஜெயலலிதா கடந்த 05-12-2016 அன்று நள்ளிரவு 11.30 மணிக்கு இறந்தார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் 06-12-2016 மாலை அன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலோனோர் தற்போது கூறி இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்றத்தில் ஒருவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது .

இந்த நிலையில் ஜெயலலிதாவிற்கு செப்டம்பர் 22 தேதியே அப்பல்லோ மருத்துவமனையில் இறுதிச் சடங்கு  நடைபெற்றதாக காணொளியுடன் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் கூறப்பட்டுள்ளதாவது :


மேற்கண்ட வீடியோ செப்டம்பர் 23 நாள் அம்மாவை அப்பல்லோவில் சேர்த்த அடுத்த நாள் காலை எடுக்கப்பட்டது.

இந்த வீடியோவில் இருக்கும் ஐயங்காரை கவனியுங்கள்இவர்தான் அம்மாவின் இறுதிச்சடங்கை செய்த ஐயங்கார்.

செப்டம்பர் 23 தேதி இந்த ஐயங்காரை அப்பல்லோ அழைத்தது யார்.

இவருக்கு இரண்டுமாதம் முன் என்ன வேலை.

இவரை சசியின் அடியாள் பின்பக்க கதவு வழி வருமாறு செய்கை செய்வதை கவனிக்கவும்.

இதிலிருந்து உண்மை தெரிகிறதா அம்மா செப்டம்பர் 22 தேதியே கொல்லப்பட்டார்சசி அவசரத்தில் ஐயங்காரை அழைத்து அப்பல்லோவிலே ஈமக்கிரியை செய்ய அழைத்துவிட்டாள் பதட்டத்தில்.

இந்த வீடியோ சுப்ரீம் கோர்ட்டில் முக்கிய ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஐயங்கார் விசாரணை வளையத்தில் வந்து உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார்.

இந்த உண்மையை அனைவருக்கும் பகிரவும்இப்படிக்குஉண்மையான அம்மா விசுவாசிஎன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் இறுதிச் சடங்கு நடைபெற்றதாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் காணொளி இணைப்பு :-

 

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions