ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு எழுதிய கடிதம் ! வைரலாகும் தகவல்

Bookmark and Share

ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு எழுதிய கடிதம் ! வைரலாகும் தகவல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அவரது தோழி சசிகலாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினாராம்.

கற்பனையாக யாரோ இந்த கடிதத்தை தயாரித்து பரப்பி இருக்கிறார்கள். யாரை நினைத்து எழுதினார்கள் எனபது அவர்களுக்கே தெரியும். சமூகவளைதளத்தில் இப்படியும்

தகவல்கள் பரப்பப்படுகிறது என்பதை வெளிக்காட்ட தான் இங்கு பதிவிடப்படுகிறது.

அன்பு உடன் பிறவா தோழி சசி, உன் அன்பு அம்மு (ஜெயா) விண்ணுலகிலிருந்து எழுதும் மடல்.

நீ நலமா என்ற வரியை நான் எப்படி பதிவேன்? ஏனென்றால் விண்ணுலக ஜன்னல் வழியாக நான் தினமும் பார்க்கிறேனே !!! அதன் பின்பும் நீ நலமா என்று நான் எப்படி கேட்பேன்?
காட்சிகள் அரங்கேரும் வேகமும், நேர்த்தியும் என் முதுகிற்கு பின் நடந்த பல நாள் திட்டத்தின் பரமபத விளையாட்டா அன்பு தோழியே?

உனக்காக என் இரத்த உறவுகளை தள்ளி வைத்தேனே…… என் கடைசி நிமிடத்தில் ஒரு பிடி காற்றுக்காக என் இதயம் ஏங்கியபோதுதான் உறவுகளின் அருமை நான் உணர்ந்தேன்.
நீ என்னை அக்கா என்றழைத்தாலும் நான் உனக்கு அன்னையாகத்தானே இருந்தேன். அமைதி வளம் வளர்ச்சி இது மக்களுக்காக….ஆனால் என்னை அமைதியாக்கி வளமும் வளர்ச்சியும் உனதாக்கி கொண்டாய்.

விண்ணுலகில் புரட்சித் தலைவர் என்னை பார்த்து கேட்கிறார்!

கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை என்ற நீ!… நித்தம் நித்தம் துரோகிகளுடனே வாழ்ந்திருக்கிறாயே.

நான் என்ன பதில் சொல்ல முடியும்?. என் துரோக வரலாறு…..அடுத்த தலைமுறைக்கு நல்ல பாடமாக இருக்குமென்ற ஆறுதல் ஒன்று மட்டும் எனக்கு மிச்சமிருக்கிறது.

பாமரனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தேனே “” இன்று ஒருவனும் எனக்காக கலங்காததை நினைக்கும்போது உன் அம்முவிற்கு நெஞ்சு வலிக்கிறது தோழி.

உடைந்த மீன் தொட்டியிலிருந்து தரையில் விழுந்த மீன்களாய்……..தத்தளித்து கொண்டிருக்கும் என் அப்பாவி தொண்டர்களை, நான் எப்படி ஆற்றுவேன், தேற்றுவேன்.

ஒன்றை மட்டும் சொல்கிறேன் இந்த துரோக வரலாற்றின் கடைசி பக்கத்தில் உனக்கான காட்சிகள் அரங்கேரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இப்படிக்கு
உன் உடன்பிறவா தோழி
அம்மு..


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions