ஜெயம்ராஜாவை பின்பற்றும் சத்யபிரபாஸ்!

Bookmark and Share

ஜெயம்ராஜாவை பின்பற்றும் சத்யபிரபாஸ்!

ஜெயம் படத்தை இயக்கியவர் ராஜா. அந்த படத்தில் அவரது தம்பி ரவி நாயகனாக நடித்தார். அதைத்தொடர்ந்து எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி என தொடர்ந்து கூட்டணி அமைத்த அவர்கள் இப்போது தனி ஒருவனிலும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஜெயம்ராஜாவிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய நடிகர் ஆதியின் அண்ணன் பிரபாசும் யாகவராயினும் நா காக்க என்ற தனது முதல் படத்தை தம்பி ஆதியை வைத்து தற்போது இயக்கியிருக்கிறார்.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஏய் படத்தில் ஏய் என்கிற ஒரேயொரு வார்த்தையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்ததுபோன்று இந்த படத்திலும் ஒரேயொரு வார்த்தையை மையமாக வைத்துதான் கதை பண்ணியிருக்கிறார் சத்யபிரபாஸ்.

அதிலிருந்து ஆரம்பிக்கும் கதை எங்கே போய் முடிகிறது. எப்படி முடிகிறது என்பதுதான் இந்த படமாம். தனது முதல் பரிசோதனையை தம்பி ஆதியை வைத்தே தொடங்கியிருக்கும் சத்யபிரபாஸ், இதையடுத்தும் ஆதியை வைத்து பல படங்களை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

அந்த வகையில், தனது குருநாதர் ஜெயம் ராஜா தம்பி ஜெயம்ரவியை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்குவது போன்று சத்யபிரபாசும் தம்பி ஆதியை வைத்து வரிசையாக படங்கள் கொடுக்கப்போகிறாராம்.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions