ஹீரோவாகிறார் ஜெயம் ராஜா!

Bookmark and Share

ஹீரோவாகிறார் ஜெயம் ராஜா!

தமிழ் சினிமாவின் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் ஜெயம்ராஜா. ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி போன்ற ரீமேக் படங்களை இயக்கிய ராஜா வேலாயுதம் என்ற சொந்த கதையையும் விஜய்யை வைத்து இயக்கினார்.

தற்போது தம்பி ஜெயம்ரவி நடிக்க தனி ஒருவன் படத்தை இயக்கி வருகிறார். இதுவும் அவரது சொந்தக் கதை. இதற்கிடையில் ராஜா, என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து நடிகராகவும் ஆனார்.

தனி ஒருவன் படத்தை முடித்துவிட்டு அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பாஸ்மார்க் என்ற படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஜெயசீலன் என்பவர் தயாரிக்கிறார்.

இது நடுத்தர வயது ஆசிரியர் ஒருவரின் கதை என்கிறார்கள். கதையை கேட்ட உடனேயே ராஜா நடிக்க ஒப்புக் கொண்டாராம். ஜுன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions