படமாகும் சர்ச்சைக்குரிய டண்டணக்கா பாடல்

Bookmark and Share

படமாகும் சர்ச்சைக்குரிய டண்டணக்கா பாடல்

லக்ஷ்மண் இயக்கிவரும் ரோமியோ ஜுலியட் படத்தில் டி.ராஜேந்தரின் ரசிகராக வருகிறார் ஜெயம் ரவி. அதன் காரணமாக, டி.ஆரின் புகழ்மிக்க டண்டணக்கா வரியை பயன்படுத்தி ஒரு பாடலை படத்தில் வைத்தனர். டி.இமான் இசையமைக்க, அனிருத் பாடிய அந்தப் பாடல் உடனடி ஹிட்டானது.

 ஆனால், இணையத்தில் புழங்குகிறவர்கள், டண்டணக்கா பாடலை வைத்து டி.ஆரை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். சில தினங்களிலேயே, டி.ஆரை புகழ்ந்து எழுதப்பட்ட டண்டணக்கா பாடல், அவரை கிண்டல் செய்யும் பாடலாக மாற்றமடைந்தது.

பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என, படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு டி.ஆர். நோட்டீஸ் அனுப்பினார். நான் உண்மையான டி.ஆர். ரசிகன். அதனால்தான் அந்தப் பாடலை படத்தில் வைத்தேன்.

அதனை டி.ஆரிடம் விளக்குவதற்காக அவரை  தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை. ஒரு உண்மையான டி.ஆர் ரசிகனுக்கு இப்படியா ஆக வேண்டும் என வருத்தப்படுகிறார், படத்தின் இயக்குனர் லக்ஷ்மண். டண்டணக்கா பாடலை ஏற்கனவே படமாக்கிவிட்டனர்.

இப்போது மீண்டும் அப்பாடலை டி.ஆரை புகழும் காட்சிகளுடன் எடுத்து வருகின்றனர். இந்த இரு பாடலையும் டி.ஆரிடம் திரையிட்டு காட்டி அவர் எதை அனுமதிக்கிறாரோ, அதனை படத்தில் வைக்க முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions