கூலாக படத்தை தொடங்கும் ஜெயம் ரவி

Bookmark and Share

கூலாக படத்தை தொடங்கும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் ‘நிமிர்ந்து நில்’ படம் வெளியானது. இப்படத்தையடுத்து ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, ‘அப்பாடக்கரு’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில் ‘ரோமியோ ஜூலியட்’ படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பூலோகம்’ நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். இவர் அடுத்ததாக ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குளு குளுப்பான ஊட்டியில் தொடங்க இருக்கிறது. ஊட்டியில் உள்ள மலைப் பகுதிகள் படத்தில் முக்கிய இடம் பெறும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மேலும் பல புதுமுகங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தை மைக்கல் ராயப்பன் தயாரிக்கவுள்ளார்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions