என் படத்தை குடும்பத்துடன் பாரப்பது மகிழ்ச்சியளிக்கிறது மகிழ்ச்சியில் ஜெயம் ரவி

Bookmark and Share

என் படத்தை குடும்பத்துடன் பாரப்பது மகிழ்ச்சியளிக்கிறது மகிழ்ச்சியில் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம்ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியுள்ள தனி ஒருவன் அமோக வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

இது குறித்து ஜெயம் ரவி கூறுகயில் “அரவிந்தசாமி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே படம் வெற்றி பெற்று விடும் என்று நம்பினேன். இது ஆக்ஷன் படமாக இருந்தாலும் கதாநாயகனும், வில்லுனும் ஒரு இடத்தில் கூட நேரில் மோதிக் கொள்வது போல காட்சிகள் கிடையாது.

இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்களும் ஹிட் ஆகி உள்ளது. குடும்பம், குடும்பமாக வந்து படத்தை பார்க்கிறார்கள்.எனது வெற்றியில் அண்ணனின் பங்கு முக்கியமாக உள்ளது. 3 படத்துக்கு ஒரு முறை அண்ணன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நயன்தாரா சிறந்த நடிகை.

அவர் இந்த படத்தில் இயல்பாக நடித்தார். அடுத்ததாக, டைரக்டர் ஷக்தி சவுந்தர்ராஜ் இயக்கத்தில் மிருதன் படத்தில் நடிக்கிறேன். இதில் லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கிறார்” என்றார். 

படத்தின் டைரக்டர் ராஜா கூறுகயில் “இந்த படத்துக்கு கதை எழுதும் போதே எனது தம்பியை மனதில் வைத்து தான் எழுதினேன்.

அரவிந்த சாமி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிப்பாரா? என்று நினைத்தேன். கதையை கேட்டு அவர் நடிக்க ஒப்புக் கொண்டதும் சந்தோஷமாக இருந்தது. மீண்டும் ஒரு நல்ல கதையுடன் ஜெயம் ரவியை இயக்குவேன்” என்றார்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions