மாணவர்களின் இலக்கு எப்போதும் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும்: ஜெயம்ரவி பேச்சு

Bookmark and Share

மாணவர்களின் இலக்கு எப்போதும் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும்: ஜெயம்ரவி பேச்சு

திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஆர்.குப்புசாமி, இயக்குனர் ஆர்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் ஞானமூர்த்தி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திரைப்பட நடிகர் ஜெயம் ரவி கல்லூரியின் ஆண்டு விழா சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி ஆண்டுவிழாவில் கலந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் திருவண்ணாமலைக்கு புதியவன் அல்ல.

ஏற்கனவே பேராண்மை படத்தின் படப்பிடிப்பின் போது இங்கு வந்திருக்கின்றேன். இந்த கல்லூரி மாணவ–மாணவிகள் மிகவும் அமைதியாகவும், ஒழுக்கமாகவும் இருப்பதை மனதார பாராட்டுகின்றேன்.

இன்னும் சொல்லப் போனால் இங்கு படிப்பதால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதுதான் உண்மை.

சினிமா கலைஞர்களின் வெற்றிக்கு காரணம் அவர்களுடைய ரசிகர்கள்தான். எனக்கு அதிக ரசிகர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மாணவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். பள்ளி வாழ்க்கைவேறு, கல்லூரி வாழ்க்கைவேறு.

கல்லூரி வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை ஆகும். கல்லூரி பருவத்தில் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்க்கும் நட்பை என்றைக்கும் மறக்கவும்கூடாது.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வெற்றி அவசியம். அந்த வெற்றியை போராடித்தான் பெற முடியும். உங்கள் இலக்கு எப்போதும் வெற்றியை நோக்கியே இருக்க வேண்டும்.

அப்போதுதான் சாதிக்கமுடியும். உங்களுடைய வெற்றிக்கு பின்னால் உங்களின் பெற்றோர்களின் தியாகங்களும், ஆசிரியர்களின் அக்கறையும், உழைப்பும் இருக்கும். இதனை எந்த சூழலிலும் மறக்கக்கூடாது.
இவ்வாறு நடிகர் ஜெயம்ரவி பேசினார்.

அதனை தொடர்ந்து மாணவ–மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது மாணவர்கள் ஜெயம் ரவியிடம் உங்களுக்கு தல பிடிக்குமா? தளபதி பிடிக்குமா? என்று கேட்டனர்.

அதற்கு ஜெயம் ரவி கூறுகையில் இரண்டு கண்களில் எது பிடிக்கும் என்று கேட்டால் 2 கண்களுமேதான் பிடிக்கும் என்றார்.
மேலும் மாணவ–மாணவிகளின் விருப்பத்திற்கேற்ப சினிமா பாடல்கள் பாடியதுடன், மாணவர்களுடன் சேர்ந்து நடனமும் ஆடினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவிக்கு கல்லூரி தலைவர் கு.கருணாநிதி நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் எஸ்.கே.பி.தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில் குமார் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ– மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முடிவில் செய்தி தொடர்பு அதிகாரி துரை நன்றி கூறினார்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions