ஜெயம்ரவியை கீழே தள்ளி விட்ட ரசிகர்கள்!

Bookmark and Share

ஜெயம்ரவியை கீழே தள்ளி விட்ட ரசிகர்கள்!

சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்தை அடுத்து பூலோகம், ரோமியோ ஜூலியட், அப்பாடக்கர், தனி ஒருவன் ஆகிய படங்களில் நடித்து வந்தார் ஜெயம்ரவி. இதில் ரோமியோ ஜூலியட் படம் நேற்று வெளியானது.

அதையடுத்து சென்னையிலுள்ள சில தியேட்டர்களுக்கு விசிட் அடித்தார் ஜெயம்ரவி. அப்போது அவர் சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்கள் அவரை மொய்த்துக்கொண்டு கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு ஈவினிங் காட்சி நடைபெறுவதற்கு முன்பு அங்கு விசிட் அடித்தார் ஜெயம்ரவி. அப்போது அங்கு படம் பார்க்க திரண்டிருந்த ரசிகர்கள் அவரைப்பார்த்ததும் முட்டிமோதிக்கொண்டு வந்து அவரிடம் கைகொடுத்தனர்.

இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கூட்டத்தில் சிக்கிய ஜெயம் ரவி கீழே விழுந்து விட்டார். இதனால் அவரது முட்டியில் அடிபட்டு விட, வலது காலை நொண்டி நொண்டி நடந்தபடி அங்கிருந்து வெளியேறினார்.

ஆனபோதும், ரோமியோ ஜூலியட் படம் திரையிட்ட அனைத்து தியேட்டர்களில் இருந்தும் நல்ல பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் வந்ததாக அப்போது குறிப்பிட்ட ஜெயம்ரவி, ரொம்ப சந்தோசமாக காணப்பட்டார்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions