ஜெயம் ரவி படத்தின் பாடல்கள் ரெடி

Bookmark and Share

ஜெயம் ரவி படத்தின் பாடல்கள் ரெடி

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா-அஞ்சலி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
சுராஜ் இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் மற்றும் காமெடி படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் தமன் இசையில் நடிகர் சிம்பு, விவேக், இசையமைப்பாளர் தேவா மற்றும் ஜெயம் ரவிகூட ஒரு பாடல் பாடியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் பதிவு எல்லாம் முடிந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
பாடல் பதிவு முடிந்துவிட்டதால் எந்நேரமும் இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை தவிர ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படமும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு ‘அப்பாடக்கர்’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions