ஜெயம்ரவிக்கு நன்றி தெரிவித்த ஹன்சிகா!

Bookmark and Share

ஜெயம்ரவிக்கு நன்றி தெரிவித்த ஹன்சிகா!

எங்கேயும் காதல் படத்தை அடுத்து ஜெயம்ரவி- ஹன்சிகா இணைந்து நடித்துள்ள படம் ரோமியோ ஜூலியட். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. குறிப்பாக, அப்படம் வெளியாவதற்கு முன்பே டண்டனக்கா பாடல் சர்ச்சையும் படத்திற்கு ஒரு நல்ல ஓப்பனிங்கை கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.  

மேலும், இந்த படத்தின் டைரக்டர் லக்ஷ்மன், காதலித்து விட்டு பசங்களை டீலில் விடும் பெண்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கொடுப்பதுபோல் படமாக்கியிருப்பதால் இளவட்ட ரசிகர்கள் படத்துக்கு ஏகபோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

அதோடு, படத்தின் நாயகி ஹன்சிகாவின் நடிப்பை இணையதளங்களில் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இந்தநிலையில், படத்தின் நாயகனான ஜெயம்ரவியும் மற்றவர்களைப்போன்று ஹன்சிகாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளி வருகிறார்.

ஒரு படத்தின் ஹீரோவே இப்படி தன்னுடன் நடித்த நடிகையின் நடிப்பை புகழ்ந்து பேசுவது மற்றவர்களைப் போன்று ஹன்சிகாவுக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளதாம். அதனால் ஜெயம்ரவிக்கு போன் செய்து உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல வார்த்தைகளே இல்லை என்று தனது இதயப்பூர்வமான நன்றிகளை உரித்தாக்கினாராம் ஹன்சிகா.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions