பாடல் காட்சியுடன் போகன் படப்பிடிப்பு தொடங்கியது

Bookmark and Share

பாடல் காட்சியுடன் போகன் படப்பிடிப்பு தொடங்கியது

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘ரோமியோ ஜூலியட்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை லஷ்மண் இயக்கியிருந்தார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். 

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் லஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமானார். மேலும், ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகாவையே இப்படத்தில் கதாநாயகியாக்க முடிவு செய்தனர். 

அதன்படி, அவரும் இப்படத்தில் நடிக்க சம்மதிக்க, ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக கலக்கிய அரவிந்த் சாமியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இவர்கள் இணையும் அந்த படத்திற்கு ‘போகன்’ என்று தலைப்பும் வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகில் உள்ள பின்னி மில்லில் பூஜையுடன் தொடங்கியது. ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இடம்பெற்ற ‘டண்டணக்கா’ பாடல் போன்ற டி.இமான் இப்படத்திற்கும் ‘டமால் டுமீல்’ என்ற பாடலை உருவாக்கியுள்ளார். 

இந்த பாடல் படப்பிடிப்புடன் படம் தொடங்குகிறது. இந்த பாடலுக்கு ராஜசுந்தரம் நடனம் அமைக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, வருண், நாகேந்திர பிரசாத், அக்ஷரா ஆகியோர் நடனமாடவிருக்கிறார்கள். 

இப்படத்தின் பூஜையில் ஐசரி கணேசன், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், விக்கி, அஸ்வின், படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்தை பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions