ஜெயம் ரவிக்கு, அடுத்தடுத்து இசை மற்றும் வெளியீடுகள்

Bookmark and Share

ஜெயம் ரவிக்கு, அடுத்தடுத்து இசை மற்றும் வெளியீடுகள்

ஜெயம் ரவி நாயகனாக நடித்த ரோமியோ ஜுலியட்' படம் கடந்த மாதம் வெளியானது. முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில் படம் ஓரளவிற்கு வசூல் செய்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவருடைய இரண்டு படங்களை அடுத்தடுத்து வெளியிடும் முடிவிற்கு இரண்டு படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஜெயம் ரவி, சுமார் இரண்டு வருடங்களாக அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் நடித்துள்ள தனி ஒருவன் படத்தின் இசையை ஜுலை 22ம் தேதியும், படத்தை ஆகஸ்ட் மாதமும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

அநேகமாக ஆகஸ்ட் 15 அன்று இந்தப் படம் வெளியாக வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக ஜுலை 20ம் தேதி, அதாவது நாளை அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'சகலகலா வல்லவன் படத்தை இசையையும், படத்தை ஜுலை 31ம் தேதியும் வெளியிட உள்ளார்கள்.

இரண்டு நாள் இடைவெளியில் இரண்டு படங்களின் இசையும், சுமார் 15 நாள் இடைவெளியில் இரண்டு படங்களும் வெளியாவது நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் நடக்கும் விஷயம். இருந்தாலும் ஜெயம் ரவி போன்ற முன்னணி ஹீரோ ஒருவரின் படம் இப்படி குறுகிய இடைவெளிக்குள் வெளிவருவது ஆரோக்கியமான விஷயமல்ல என்பது மட்டும் உண்மை.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions