தமிழ் சினிமாவில் யாரும் எடுக்காத புது முயற்சி எடுக்கும் ஜெயம் ரவி!

Bookmark and Share

 தமிழ் சினிமாவில் யாரும் எடுக்காத புது முயற்சி எடுக்கும் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி ‘மிருதன்’ படத்தை தொடர்ந்து, அடுத்தாவதாக ‘ரோமியோ ஜூலியட்’ பட இயக்குனர் லட்சுமணன் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவிருக்கிறார். அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். 

‘போகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி உருவாகவிருக்கிறது. அதாவது, இந்த படம் தமிழ் சினிமாவில் யாரும் தேர்ந்தெடுக்காத கதைக்களமாக இருக்குமாம். 

மேலும், இதில் ஜெயம் ரவி போலீசாக நடிக்கிறாராம். இதுதவிர, ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் பெரிய பிரச்சினையைக் கொடுத்த ‘டண்டணக்கா’ பாடல் போலவே இந்த படத்திலும் ஒரு பாடலை அமைக்கவிருக்கிறார்களாம்.

இந்த படத்தில் அரவிந்த்சாமி இன்னொரு ஹீரோவாக நடிப்பதாக கூறப்படுகிறது. அவருடைய உண்மையான கதாபாத்திரம் குறித்து மட்டும் படக்குழுவினர் எதுவும் சொல்ல மறுத்துவிட்டனர். 

‘போகன்’ படத்திற்கான போட்டோ ஷுட் மார்ச் 4-ந் தேதி தொடங்கவிருக்கிறது. மார்ச் 18-ல் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள்.  படப்பிடிப்பை சென்னை, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்புகளை நடத்தவுள்ளனர். 

இப்படத்தை பிரபுதேவா தயாரிக்கிறார். இயக்குனர் லட்சுமணன் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்கு பிறகு பிரபுதேவாவை நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்து,

கதையெல்லாம் தயார் செய்தாராம். ஆனால், பிரபுதேவாவோ இப்போதைக்கு தான் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, அவருடைய படத்தை தயாரிப்பதாக கூறிவிட்டாராம். 

பின்னர், ஜெயம் ரவிக்காக தனியாக கதை தயார் செய்து ‘போகன்’ படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க பிரபுதேவாவிடம் கூறியிருக்கிறாராம். அவர் என்ன முடிவு சொல்வார் என்பதற்காக லட்சுமணன் காத்திருக்கிறாராம். 

‘தனி ஒருவன்’, ‘மிருதன்’ ஆகிய படங்களுக்கு பிறகு ஜெயம் ரவி போலீசாக நடிக்கவிருக்கும் மூன்றாவது படம் ‘போகன்’ என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions