2015 இல் தனி ஒருவனாக நின்ற ஜெயம் ரவி!

Bookmark and Share

2015 இல் தனி ஒருவனாக நின்ற ஜெயம் ரவி!

ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன், தனி ஒருவன், பூலோகம் ஆகிய நான்கு படங்கள் வெளிவந்து அதில் மூன்று படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது. இதில் தனி ஒருவன் ஜெயம் ரவிக்கு மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிற்கே சிறந்த படமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ரோமியோ ஜூலியட்

ஜெயம் ரவி நடிப்பில் லக்ஷமன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ரோமியோ ஜூலியட்’. ‘எங்கேயும் காதல்’ படத்தில் இணைந்த ஜெயம் ரவி- ஹன்சிகா மீண்டும் இந்த படத்தில் இணைந்தனர். எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவாக நினைக்கும் ஒரு இளைஞன், அதேபோல் எந்தவொரு பாசிட்டிவான விஷயத்தையும் நெகட்டிவாகவே யோசனை செய்யும் ஒரு இளம்பெண். ரெண்டு பேருக்கும் காதல் வருகிறது. இந்த காதல் கடைசிவரை நிலைத்து நின்று கைகூடியதா? இல்லையா? என்பதை அழகாக சொல்லி அதில் வெற்றியும் அடைந்தனர்.

சகலகலா வல்லவன்

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் , சுராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சகலகலாவல்லவன். இத்திரைப்படம் ஜெயம் ரவி சூரியுடன் பகை, அஞ்சலியுடன் காதல், என கலகலப்பாக நகர்கிறது. எதிர்பாராத விதமாக ஜெயம் ரவிக்கும், திரிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது.

சிட்டி பொண்ணான திரிஷாவுக்கும், கிராமத்து பையனான ரவிக்கும் ஒத்துவராமல் போக, இருவரும் பிரிய முடிவெடுக்கிறார்கள். விவாகரத்து வாங்குவதற்காக கிராமத்திற்கு வரும் த்ரிஷா ஜெயம்ரவியின் குடும்பம் சார்பாக தேர்தலில் நிற்கிறார். இவர்களுக்கு எதிராக, சூரியின் குடும்பம் சார்பாக அஞ்சலி நிற்கிறார்.

தேர்தலில் காதலி ஜெயித்தாரா, மனைவி ஜெயித்தாரா. திரிஷா விவாகரத்து வாங்கினாரா, ஜெயம் ரவியுடன் சேர்ந்தாரா என்பதை வயிறு குலுங்க குலுங்க நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார்கள்.

தனி ஒருவன்

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் ’தனி ஒருவன்’. இப்படத்தின் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் வம்சி கிருஷ்ணா, அரவிந்த் சுவாமி , கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, அபிநயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பெரும்பாலும் டப்பிங் படங்களையே இயக்கிய மோகன் ராஜா முதன் முறையாக சொந்த கதையை படமாக்கி இருக்கி இருந்தார். அதில் மாபெரும் வெற்றியும் பெற்றார்.

பூலோகம்

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் புரட்சி இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்க, த்ரிஷா அவரது ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ‘பூலோகம்’.

பரம்பரை பரம்பரையாக பாக்ஸிங் எனும் குத்துசண்டை விலையாட்டில் கோலோச்சி வரும் வட சென்னை பகுதிவாசி ஜெயம்ரவி. பாக்ஸரான தன் அப்பாவை தனது சின்ன வயதிலேயே இழந்த ரவியை பெரிய பாக்ஸராக்கிறார் பாக்ஸிங்கை குலத்தொழிலாக கொண்ட பொன்வண்ணன். பெரிய பாக்ஸராக வளர்ந்து ஆளாகும் ஜெயம் ரவியை வைத்து பெட்டிங் நடத்தி பணம் பண்ணுகிறார் பிரகாஷ்ராஜ்., ஒரு நாள் குத்துச் சண்டை போட்டியில் தன்னால் தாக்கப்படும் எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவது கண்டு மனம் இறங்கும் ஜெயம் ரவி., இனி குத்துசண்டை வேண்டாம் என ஒதுங்க., அவரை வைத்து பணம் பார்க்கும் பிரகாஷ்ராஜ் அவரை விடா பிடியாக துரத்தி தன் பணத்தாசைக்கு தொடர்ந்து பலியாக்க முயற்சிக்கிறார்.

பிரகாஷ் ராஜின் பணத்தாசையை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொள்ளும் ரவி., அவரிடமிருந்து விலகி நிற்க முயற்சிக்க., அதில் வெகுண்டெழும் – பிரகாஷ்ராஜ்., ரவியை தீர்த்து கட்ட வெளிநாட்டில் இருந்து ஒரு பாக்ஸரை களம் இறக்குகிறார். இறுதியில், விலகி நின்ற ஜெயம் ரவி ஜெயித்தாரா ? வெளிநாட்டு பாக்ஸரும் அவரை களம் இறக்கிய பிரகாஷ் ராஜூம் ஜெயித்தனரா..? எனும் கதையுடன்., ரவி வசிக்கும் பகுதியில் ஹோட்டல் நடத்தும் த்ரிஷாவுடனான ரவியின் காதலையும் கலந்து கட்டி பூலோகத்தை புதுமைலோகமாக படைத்திருந்தனர்.

ஆக இந்த ஆண்டு ஜெயம் ரவியின் ஆண்டு என்றே கூறவேண்டும். 2016 ஆம் ஆண்டும் ரவிக்கு நல்ல ஆண்டாக அமைய தமிழ் ஸ்டார் வாழ்த்துகிறது.


Post your comment

Related News
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions