ஜெயிக்கிற பக்கமா ஜெயம்ரவி!

Bookmark and Share

ஜெயிக்கிற பக்கமா ஜெயம்ரவி!

கோலிவுட்டில் தற்போது நடிகர் சங்க தேர்தல் விவகாரம்தான் அக்னி நட்சத்திர வெயிலாய் அனல் பறந்து கொண்டிருக்கிறது. சரத்குமார், ராதாரவி அணி ஒரு பக்கமும், விஷால், நாசர் அணி இன்னொரு பக்கமும் அரசியல்வாதிகளைப் போன்று தீவிர வாக்குசேகரிப்பில் வரிந்து கட்டி வருகிறார்கள்.

அதோடு, யாராவது நடிகர் நடிகைகள் உதவி என்று குரல் கொடுத்தால் நான் நீயென்று போட்டிபோட்டுக் கொண்டு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

அதோடு எங்கள் அணி ஜெயித்தால் உங்களுக்கு இந்தந்த சலுகைகளை யெல்லாம் செய்வோம் என்றும் அரசியல் பாணியில் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

இந்தநிலையில், பல இளவட்ட நடிகர் நடிகைகள் எந்தெந்த பக்கம் இருக்கிறார்கள் என்பது ஓரளவு தெரிந்து விட்டது என்றாலும், ஜெயம்ரவி போன்ற சிலர் வாயே திறக்காமல் கமுக்கமாக இருக்கிறார்கள்.

அதனால் இதுபற்றி ஜெயம்ரவியிடம் சிலர் கேட்டதற்கு, நான் எந்த அணிக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்பது சஸ்பென்ஸ். ஆனால், கண்டிப்பாக நியாயத்தின் பக்கம்தான் நிற்பேன்.

அது நடிகர் சங்க தேர்தல் முடிவுக்கு பிறகு உங்களுக்கே தெரியும் என்கிறார்கள்.அதைக்கேட்டு, ஒருவேளை ஜெயிக்கிற பக்கம் சாய்ந்து விடலாம் என்று இந்த புத்திசாலித்தமான பதிலை சொல்லி வருகிறாரோ ஜெயம்ரவி என்று பேசிக்கொள்கிறார்கள்.

 


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions