தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்த ஜெயம் ரவி

Bookmark and Share

தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்த ஜெயம் ரவி

பேசா மடந்தை, மவுனக்குழந்தை என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ஜெயம் ரவி, தனி ஒருவன் வெற்றிக்குப்பின் தலைகால் புரியாமல் ஆடுவதாக கூறுகிறது, கோடம்பாக்கம்.

“எனக்கு பத்திரிகையாளர்கள் மீது எப்பவும் மரியாதை இருந்ததில்ல” என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்திலேயே ஜெயம்ரவி சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் லெமூரியா கண்டம் பற்றிய படம் ஒன்றில் ரவி நடிக்கப் போவதாக செய்தி வெளிவந்தது. ஆனால் ஆரம்ப நிலையிலேயே அதற்கு மூடுவிழா கண்டுவிட்டாராம், ரவி. 

ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. ஒரு கண்டமே திடீரென அழிவுக்கு ஆளாகி காணாமல் போவது போலவும் அதிலிருந்து ஹீரோ எப்படி தப்பித்து வெளியேறினார் என்பதை பற்றியுமான கதை இது என்பதால், செலவு எக்கச்செக்கமாகும் என்பதை நன்கு புரிந்தே இந்த படத்தை தயாரிக்க முன் வந்தாராம், அந்த தயாரிப்பாளர்.

இதுபோன்ற கதைகளை எடுப்பதற்கு கோடம்பாக்கத்தில் இவரைப்போல ஒன்றிரண்டு தயாரிப்பாளர்கள் தான் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய சப்ஜெக்டில் நடிக்க ஆசைப்படும் ஹீரோ, அதற்கான சலுகையை தயாரிப்பாளருக்கும் தர வேண்டும் அல்லவா? ஆனால், என் சம்பளம் இவ்வளவு… என்று ஜெயம் ரவி ஒரு தொகையை சொல்ல, அதை கேட்டு ஷாக் ஆகிவிட்டாராம், தயாரிப்பாளர்.

“வேணும்'னா ஒண்ணு பண்ணலாம். படத்தை எடுப்போம். ரிலீஸ் பண்ணுவோம். வர்ற கலெக்ஷன்ல உங்களுக்கு இவ்வளவு, எங்களுக்கு இவ்வளவு” என்று ஜெயம் ரவியிடம் டீல் பேசினாராம், தயாரிப்பாளர். ஆனால் ஜெயம் ரவியோ இதற்கும் ஒத்து வரவில்லையாம். 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions