தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்

Bookmark and Share

தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்

ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் ‘பூலோகம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜேஷ், பொன்வண்ணன், சண்முகராஜன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் வசனம் எழுத, என்.கல்யாண் கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

வட சென்னையில் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்றது. நீண்ட நாட்களாக படம் வெளிவரும் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில்,  படத்தை தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே தீபாவளி அன்று, விஜய்யின் ‘கத்தி’, விஷாலின் ‘பூஜை’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. தனது தயாரிப்பான ‘ஐ’ படம் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளிப் போனதால், பூலோகம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ஆஸ்கர் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளார். 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions