இந்த ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!

Bookmark and Share

இந்த ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!

ஆண்டின் இறுதி வாரத்தில் வெளியாகியுள்ள பூலோகம் ஜெயம் ரவிக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டைப் பொறுத்தவரை வெற்றிகரமான ஹீரோ என்றால் அது ஜெயம் ரவிதான்.

இந்த ஆண்டு மட்டும் அவர் நடித்த நான்கு படங்கள் - ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன், தனி ஒருவன் மற்றும் பூலோகம் - வெளியாகின.

இந்த நான்கில் ரோமியோ ஜூலியட் ஹிட் ரகம் என்றால், சகலகலா வல்லவன் பரவாயில்லை ரகம். தனி ஒருவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெயம் ரவியை முன்னணி நாயகனாகவும் இந்தப் படம் உயர்த்தியது.

இந்த நிலையில் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்து இரண்டு ஆண்டுகளாக பெட்டியில் கிடந்த பூலோகம் படம் இன்று உலகெங்கும் வெளியானது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் படத்துக்கு பிரமாதமான வரவேற்பு.

எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்ற ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு இனிய அதிர்ச்சியாக இருந்ததை, அவர்கள் சமூக வலைத் தளப் பதிவுகளில் பார்க்க முடிந்தது. ஒரு சிக்ஸரடித்து இன்னிங்ஸை நிறைவு செய்வது போல, இந்த ஆண்டை முடித்திருக்கிறார் ஜெயம் ரவி.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions