ரோமியோ ஜூலியட் படத்தில் ஹேப்பி எண்டிங்! -ஜெயம்ரவி

Bookmark and Share

ரோமியோ ஜூலியட் படத்தில் ஹேப்பி எண்டிங்! -ஜெயம்ரவி

நிமிர்ந்து நில் படத்துக்கு பிறகு ஜெயம்ரவி நடிப்பில் தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், அப்பாடக்கர் ஆகிய படங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த படங்களுக்கு முன்பு த்ரிஷாவுடன் இணைந்து அவர் நடித்த பூலோகம் படம் பல மாதங்களாகவே ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், அவர் நடித்துக்கொண்டிருக்கும் 3 படங்களில் ரோமியோ ஜூலியட் தற்போது திரைக்கு வரத்தயாராகி விட்டது. இந்த படம் பற்றி ஜெயம்ரவி கூறும்போது, ரோமியோ ஜூலியட் என்ற டைட்டிலே இந்த படம் காதல் கதை என்பதை சொல்கிறது.

ஆனால், இதற்கு முன்பு எத்தனையோ காதல் கதைகள் வந்தபோதும் இது வித்தியாசமானதாக இருக்கும்.மேலும், இந்த படத்தில் டைரக்டர் லக்ஷ்மன், தனது வாழ்க்கையில், நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவராஸ்யமான விசயங்களையும் கலந்து இந்த கதையை பண்ணியிருக்கிறார்.

எதையுமே டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் அவர் இந்த படத்தின் கதையை என்னிடம் அலட்டல் இல்லாமல் சொன்னார். அவர் இந்த கோடம்பாக்கத்துக்கு ஒரு முக்கியமான வரவாக இருப்பார். அதேபோல், இதற்கு முன்பு ஹன்சிகாவின் அழகுதான் திரையில் தெரிந்தது.

ஆனால் இந்த படத்தில் அவரது திறமையும் தெரியும். ஏற்கனவே அவருடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்துள்ள நான் இந்த படத்தில் அவருடன் நடித்தபோது அவரது திறமையை உணர்ந்தேன்.

அந்த வகையில், ஹன்சிகாவுடன் போட்டி போட்டு நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று சொல்லும் ஜெயம்ரவி, இந்த ரோமியோ ஜூலியட் படம் எனக்கு முக்கியமான படமாக இருக்கும்.

அதோடு, ரோமியோ ஜூலியட் என்பதால் இந்த படத்தின் க்ளைமாக்சில் காதலர்கள் இறந்து விடுவார்களோ என்று நினைக்க வேண்டாம். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் ஹேப்பி எண்டிங்காகவே முடிகிறது என்கிறார் ஜெயம்ரவி.

 

 

 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions