ஜெயம் ரவி,லட்சுமி மேனன் புதிய ஜோடி

Bookmark and Share

ஜெயம் ரவி,லட்சுமி மேனன் புதிய ஜோடி

“நாணயம், நாய்கள் ஜாக்கிரதை” ஆகிய படங்களை இயக்கிய சக்தி ராஜன் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்கள். இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை.

ஜெயம் ரவி தற்போது, “அப்பா டக்கர், ரோமியோ ஜுலியட், தனியொருவன்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்போது சக்தி ராஜன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். 'கொம்பன்' பட வெளியீட்டிற்குப் பிறகு எந்த புதுப் படத்தையும் ஒப்பந்தம் செய்யாமல் இருந்த லட்சுமி மேனன் தற்போது இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

பிளஸ் டூ பரீட்சையை எழுதி முடித்து விட்டதால், இனி படங்களில் தொடர்ந்து நடிக்கப் போவதாக லட்சுமி மேனன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். சக்தி ராஜன் இயக்குனராக அறிமுகமான 'நாணயம்' படம் பெரிய வெற்றியைப் பெறாமல், தோல்விப் படமாகவே அமைந்தது.

ஆனால், அந்தப் படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கடுத்து சக்திராஜன் இயக்கிய 'நாய்கள் ஜாக்கிரதை' படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிக்க உள்ள படமும் சக்திராஜனின் முந்தைய படங்களைப் போலவே வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.

 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions