காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் ஜெயம் ரவியின் 'மிருதன்'

Bookmark and Share

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் ஜெயம் ரவியின் 'மிருதன்'

ஜெயம் ரவி - லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் மிருதன் திரைப்படத்தின் பாடல்களை வருகின்ற 9 ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

நாய்கள் ஜாக்கிரதை பட புகழ் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் மிருதன். கடந்த 31ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகின்ற ஜனவரி 9 ம் தேதியன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழின் முதல் ஸோம்பி திரைப்படமாக உருவாகும் மிருதன் படத்தில் ஸோம்பிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்றும் வீரனாக ஜெயம் ரவியும், மருத்துவராக லட்சுமி மேனனும் நடித்திருக்கின்றனர்.

முதல் முறையாக லட்சுமி மேனனுடன் இணைந்து ஜெயம் ரவி நடித்திருப்பது, படத்திற்குப்படம் வித்தியாசம் காட்டும் ஜெயம் ரவி போன்ற காரணங்களால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மேலும் கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் மற்றும் பூலோகம் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக மாறி ஹாட்ரிக் நாயகன் என்ற அந்தஸ்தை ரவிக்கு பெற்றுத் தந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டிலும் ஜெயம் ரவி தனது வெற்றி நாயகன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.

முன்னதாக பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மிருதன் தற்போது பிப்ரவரி 12 ம் தேதியில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. மிருதன் என்பதற்கு ஜெயிப்பவன் மற்றும் ஸோம்பி என்ற 2 அர்த்தங்கள் உண்டு.

மனிதர்களைக் காக்க ஸோம்பிகளை எதிர்த்துப் போராடும் ஜெயம் ரவி அதில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் கதையாம்.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions