ஜெயம் ரவியின் மிருதன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு?

Bookmark and Share

ஜெயம் ரவியின்  மிருதன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு?

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மிருதன்’. ‘ஜோம்பி’ பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக கூறியுள்ளனர். 

இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை தரவே, படத்திற்கு எப்படியாவது ‘யுஏ’ சான்றிதழ் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளனர். அதன்படி, படத்தில் ஒரு சில காட்சிகளை நீக்கிவிட்டு, படத்தை மறுபடியும் தணிக்கை குழுவினரின் மறுபார்வைக்கு அனுப்ப உள்ளனர். 

அதன்பிறகு, தணிக்கை குழுவினர் எடுக்கும் முடிவை பொறுத்து படத்தின் ரீலீஸ் தேதியை அறிவிக்கலாம் என படக்குழுவினர் தற்போதைக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அனேகமாக, ‘மிருதன்’ ரிலீஸ் தேதி பிப்ரவரி 19-ந் தேதிக்கு வெளியாகலாம் என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions