ஜெயம் ரவி நடித்துள்ள மிருதன் பட கிளைமாக்சில் 500 துணை நடிகர்கள்

Bookmark and Share

ஜெயம் ரவி நடித்துள்ள மிருதன் பட கிளைமாக்சில் 500 துணை நடிகர்கள்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘மிருதன்’ படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி காதலர் தினத்தையொட்டி வெளிவரவிருக்கிறது. சக்தி சௌந்திரராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். 

Zombie பாணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் சினிமாவுக்கும் முற்றிலும் வித்தியாசமானது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டைக்காட்சிக்காக சுமார் 500 துணை நடிகர்களை பயன்படுத்தியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. 

இந்த காட்சியை ஒருநாள் இரவு ஆரம்பித்து அதிகாலை வரை எடுத்துள்ளனர். அப்போது, இந்த காட்சியில் நடித்த 500 துணை நடிகர்களும் எதையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார்கள். இதுபோல், படத்தில் குறிப்பிடும்படியான நிறைய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். 

இந்த புதிய முயற்சியை ரசிகர்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை மைக்கேல் ராயப்பன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions