மிருதன் கூட்டணியில் உருவாகும் பேண்டஸி படம்

Bookmark and Share

மிருதன் கூட்டணியில் உருவாகும் பேண்டஸி படம்

ஜெயம் ரவி நடிப்பில் இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மிருதன்’. இப்படத்தை சக்தி சொந்தர் ராஜன் இயக்கியிருந்தார்.

இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். ஜோம்பி படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது.

மிருதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். இந்த படம் ‘மிருதன்’ இரண்டாம் பாகம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது பேண்டஸி படமாக உருவாக்க இருக்கிறார்கள். இப்படமும் மிருதன் போல் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய படத்தை ‘நான் அவனில்லை’, ‘அஞ்சாதே’, ‘மீகாமன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த நேமி சந்த் ஜெபாக் புரடொக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ஜெயம் ரவி தற்போது ‘போகன்’ படத்தில் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions