
சிபிராஜ்-பிரசன்னா இணைந்து நடித்த நாணயம் படத்தை இயக்கியவர் ஷக்தி செளந்தர் ராஜன். அந்த படத்தில் பிரசன்னா நாயகனாகவும், சிபிராஜ் வில்லனாகவும் நடித்திருந்தனர். இந்த வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் அவர் பிரசன்னாவைதான் கேட்டிருந்தாராம்.
ஆனால், படத்தின் மொத்த கதையையும் கேட்டபோது அந்த வில்லன் வேடம் சிபிராஜ்க்கு அதிகமாக பிடித்து விட, எனக்கு அந்த வில்லன் வேடம்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி நடித்ததாக அப்போது சிபிராஜ் சொல்லி வந்தார்.
ஆனபோதும் அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அதோடு சிபிராஜின் மார்க்கெட்டும் சரிந்து போனது. இருப்பினும், மீண்டும் அதே ஷக்தி செளந்தர் ராஜனின் நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் சில ஆண்டுகளுக்குப்பிறகு ரீ-என்ட்ரி ஆனார் சிபிராஜ்.
அப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்க இப்போது ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தற்போது ஜெயம்ரவிக்காக ஒரு கதை ரெடி பண்ணியுள்ளார் இயக்குனர் ஷக்தி செளந்தர்ராஜன்.
அந்த படத்தை மைக்கேல் ராயப்பனின் நிறுவனத்துக்கு இயக்கப்போகிறாராம். நாய்கள் ஜாக்கிரதை படத்தைக்காட்டிலும் ஒரு த்ரில்லிங்கான கதையில் தயாராகும் அந்த படத்தில், தனி ஒருவன் படத்தில் நடித்து முடித்ததும் நடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறாராம் ஜெயம்ரவி.
Post your comment