ஜெயம் ரவி எனது உடன்பிறவா தம்பி : பிரபுதேவா

Bookmark and Share

ஜெயம் ரவி எனது உடன்பிறவா தம்பி : பிரபுதேவா

நடிகர் ஜெயம் ரவி, தனது உடன்பிறவா தம்பி என்று நடன இயக்குநர், நடிகர் இயக்குநர் என்று படிப்படியாக முன்னேறி, தற்போது தயாரிப்பாளாராக உயர்ந்துள்ள பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

"Prabhu Deva Studios" என்ற பெயரில், பிரபுதேவா, புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சமீபத்தில் துவக்கினார். இந்த நிறுவனம், தற்போது 3 படத்தயாரிப்புகளில் களமிறங்கியுள்ளது.

சென்னையில், இப்படக்குழுவினரை அறிமுகம் செய்துவைத்து பிரபுதேவா பேசியதாவது, நடிகருக்கு என்றால் ஒரு கஷ்டம் இருக்கும், இயக்குநர் என்றால் ஒரு கஷ்டம் இருக்கும். ஆனால் தயாரிப்பாளருக்கு எல்லாவித கஷ்டமும் இருக்கும் என்று தயாரிப்பாளர் ஆன பிறகுதான் தெரிந்துகொண்டேன். 

இன்னும் ஒரு படம் கூட தயாரிக்கவில்லை, ஆனால், அதற்குள்ளே என்னுள் டென்சன் உருவாகிவிட்டது. நான் தயாரிப்பாளர் ஆனதற்கு முழுமுதற்காரணம் ஐசரி கணேஷ் தான்.அமலா பால் தயாரிப்பில், பிரியதர்ஷன் இயக்க உள்ள படத்தில் இணை தயாரிப்பாளர் ஆகியுள்ளேன்.

எனது சினிமா குரு யார் என்றால் அது பிரியதர்ஷன் தான். நான் அவரை தேர்ந்தெடுத்தேன் என்று சொல்வதைவிட, அவர் தான் என்னை தேர்ந்தெடுத்தார் என்று சொல்ல வேண்டும்.

அவர் மிகவும் இயல்பானவர், அவரது சமையல் சூப்பராக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பது பெருமையாக உள்ளது.நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா எனினும், எனக்கு ஜெயம் ரவி, உடன்பிறவா தம்பி ஆவார்.ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றியை தொடர்ந்து லட்சுமண் இயக்கத்தி்ல், ஜெயம் ரவியின் நடிப்பில், இமானின் இசையமைப்பில் உருவாகும் படத்தை தயாரிக்கிறேன்...

அடுத்ததாக, இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குநர் விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில், ஐசரி வேலனின் பேரன் வருண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக பிரபுதேவா கூறினார்.வருண், விரைவில் வெளிவர இருக்கும் "நைட்ஷோ" படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions