தேர்தலில் போட்டியிடும் ஜெயம்ரவி - சூரி!

Bookmark and Share

தேர்தலில் போட்டியிடும் ஜெயம்ரவி - சூரி!

ஆதிபகவன், நிமிர்ந்து நில் படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடித்த ஜெயம்ரவி, இப்போது பூலோகம், தனிஒருவன் படங்களிலும் அதையே தொடர்ந்த போதும், அப்பாடக்கர், ரோமியோ ஜூலியட் படங்களில் ஜாலியான ஹீரோவாக நடித்து வருகிறார்.

அதில் ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகா, பூனம் பாஜ்வா இருவரையும் போட்டி போட்டு காதலிக்கும் ஒரு முக்கோண காதல் கதையில் நடித்திருக்கிறார். ஆனால், சுராஜ் இயக்கியுள்ள அப்பாடக்கர் படத்தில் கலகலப்பான காமெடி கதையில் நடித்துள்ளார்.

இதுவும் காதல் கதைதான். அதாவது அஞ்சலியை ஜெயம் ரவி - சூரி இருவருமே போட்டி போட்டு காதலித்து நூல் விடுவார்களாம். முன்னதாக, படம் முழுக்க எதிரும் புதிருமான கேரக்டர்களில் நடித்துள்ள அவர்கள், தேர்தலிலும் போட்டியிடுவார்களாம்.

அப்போது, தங்களது பக்கம் வாக்காளர்களை இழுக்கும் முயற்சியாக ஜெயம்ரவி ஒரு நடிகை கூட்டி வந்து குத்தாட்ட நிகழ்ச்சி நடத்துவாராம். ஆனால், சூரியோ, ஷகீலாவை அழைத்து வந்து ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவாராம்.

ஆனால், ஒரு சேஞ்சுக்காக, கவர்ச்சிக்கு பேர்போன ஷகீலாவை இளவரசி கெட்டப்பில் முழுக்க கவர் பண்ணிய காஸ்டியூம் அணிந்து ஆட விடுவாராம். விளைவு, ஜெயம்ரவி துக்கடா காஸ்டியூமில் ஆட விடும் நடிகையைப்பார்க்க மொத்த கூட்டமும் சென்று விடுவதோடு, அவர் காட்டிய குத்தாட்டத்துக்காகவே ஒட்டு மெர்தத ஊர் ஜனங்களும் அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து விடுவார்களாம். இந்த காட்சியை படு ஜாலியாக படமாக்கியிருக்கிறாராம் சுராஜ். 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions