டி.ராஜேந்தரை கலாய்ப்பதா?ரசிகர்களுக்கு ஜெயம் ரவி எச்சரிக்கை

Bookmark and Share

டி.ராஜேந்தரை கலாய்ப்பதா?ரசிகர்களுக்கு ஜெயம் ரவி எச்சரிக்கை

கோலிவுட் இளம் ஹீரோக்கள் நட்புடன் வலம் வருகின்றனர். ஜெயம் ரவி, ஆர்யா, சிம்பு, தனுஷ் என எல்லோருமே ஒருவர் வெற்றியை ஒருவர் பாராட்டி மகிழ்கின்றனர். இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்‘ படத்தில் ‘டண்டணக்கா' என்ற வார்த்தையை மையமாக வைத்து பாடல் இடம்பெறுகிறது.

டி.ராஜேந்தர் தனது படங்களில் அவ்வப்போது இந்த வசனத்தை பயன்படுத்தி இருக்கிறார். டி.ராஜேந்தரின் ரசிகராக ஜெயம் ரவி நடிப்பதால் இந்த பாடல் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

‘டங்கா மாரி...' பாடல் பாணியில் இப்பாடலை பிரபலப்படுத்த ஜெயம் ரவி ரசிகர்கள் இணைய தளங்களில் பரப்பி வருகின்றனர். ஆனால் ஒருசிலர் இதையே சாக்காக வைத்து டி.ராஜேந்தரை கலாய்ப்பதுபோல் கமென்ட் வெளியிடுகிறார்கள்.

இதைக்கண்டு வருத்தம் அடைந்திருக்கும் ஜெயம் ரவி அவர்களிடம் தனது எச்சரிக்கையை தெரிவித்துக்கொண்டிருக்கிறார். ‘எனது ரசிகர்களிடம் நான் முக்கியமாக கேட்டுக்கொள்வது இதுதான்.

'டண்டணக்கா' பாடலை காரணம் காட்டி சிலர் அதை வீடியோவாக பதிவு செய்து தவறாக பயன்படுத்துகிறார்கள். அவற்றை ரசிகர்கள் ஆதரிக்கக்கூடாது. இப்பாடலுக்கு மனதார பாராட்டு தெரிவித்த ரசிகர்களுக்கு எனது நன்றி' என குறிப்பிட்டிருக்கிறார்.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions