ஜெயம் ரவி-திரிஷா நடித்த மற்றொரு படமும் முடிந்தது

Bookmark and Share

ஜெயம் ரவி-திரிஷா நடித்த மற்றொரு படமும் முடிந்தது

ஜெயம் ரவி-திரிஷா நடிப்பில் உருவான ‘பூலோகம்’ நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கிறது. இப்படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கின்றார்.

வட சென்னையில் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்றன. நீண்ட நாட்களாக படம் வெளிவரும் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இன்று வரை இப்படம் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த ஜெயம் ரவி-திரிஷா ஜோடி ‘அப்பாடக்கர்’ படம் மூலம் மீண்டும் இணைந்தது. சுராஜ் இயக்கிய இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது முடிந்து விட்டது. இதில் ஜெயம் ரவி-திரிஷா இவர்களுடன் அஞ்சலி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஏற்கனவே நடித்த ‘பூலோகம்’ படம் வெளியாகாத நிலையில் தற்போது ‘அப்பாடக்கர்’ படமும் முடிவடைந்து விட்டதால், எந்தப் படம் முதலில் வரும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions