ஜெயம்ரவிக்கு விஜயகாந்த் கொடுத்த அட்வைஸ்!

Bookmark and Share

ஜெயம்ரவிக்கு விஜயகாந்த் கொடுத்த அட்வைஸ்!

கோடம்பாக்கத்தில் கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இந்த பெயர் அவர் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த பிறகு ஏற்பட்டது. என்றாலும், நடிகர் சங்கம் உள்பட பல இடங்களில் அவர் கேப்டனாக இருந்து சாதித்துள்ளார். குறிப்பாக, நடிகர் சங்கம் கடனில் சிக்கியிருந்தபோது, தலைவராக இருந்த விஜயகாந்த், நடிகர் நடிகைகளை திரட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தி அந்த கடனை அடைத்தவர்.

அதனால், அவர் தலைமைக்கு பொருத்தமானவர் என்று சொல்லும் தமிழ் சினிமாத்துறையினர். அவர் கேப்டன் ஷிப்பிற்கு தகுதியானவர் என்று கூறி வருகின்றனர். அதோடு, இளவட்ட நடிகர்கள் தன்னை சந்திக்க வந்தால், அவர்களுக்கு ஏதேனும் அட்வைஸ்களை தனது சார்பில் அள்ளிக்கொடுப்பதிலும் வல்லவர் விஜயகாந்த்.
அந்தவகையில், அவர் வல்லரசு படத்தில் நடித்து வந்தபோது, அவர் நடித்துக்கொண்டிருந்த ஸ்பாட்டுக்கு அருகில் படப்பிடிப்பில் இருநத ஜெயம்ரவி, விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தாராம். அப்போது ஜெயம்ரவியின் படங்களில் தனக்கு பிடித்ததையும், அவரது ப்ளஸ்களையும் சுட்டிக்காட்டிய விஜயகாந்த், குரல்தான் உனக்கு மைனசாக உள்ளது. உன் உருவத்திற்கேற்ப அதுவும் கம்பீரமாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொன்னாராம். அதோடு, தினமும காலை எழுந்ததும் மெரினா பீச் போன்று எங்காவது சென்று சத்தமாக கத்துமாறு அவரிடம் சொன்னாராம்.

அதையடுத்து, அவர் சொன்னதை ஏற்று சுமார் ஒரு வாரம் மெரினா பீச்சுக்கு அதிகாலையே சென்று சத்தமாக கத்தினாராம் ஜெயம்ரவி. ஆனால், பின்னர் அந்த பழக்கத்தை விட்டு விட்டாராம். இருப்பினும், இப்போதும் அவ்வப்போது அந்த பயிற்சியை அவர் செய்து கொண்டிருக்கிறாராம். 


Post your comment





Related News
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions