ஜெயம் ரவியின் மிருதனில் புகை பிடிக்கும், குடிக்கும் காட்சிகள் இல்லையாம்!

Bookmark and Share

ஜெயம் ரவியின் மிருதனில் புகை பிடிக்கும், குடிக்கும் காட்சிகள் இல்லையாம்!

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘தனி ஒருவன்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ‘நாய்கள் ஜாக்கிரதை’ பட இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் ‘மிருதன்’ என்கிற படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக முதல் முறையாக லட்சுமிமேனன் இணைந்துள்ளார். இப்படத்தை குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். 

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்த மாதம் 18-ந் தேதி சென்னையில் தொடங்கி அடுத்தகட்டமாக ஐதராபாத்தில் நடைபெற்று, அக்டோபர் மாத இறுதியில் முழு படப்பிடிப்பும் முடியவுள்ளது. 

படத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் புகை பிடிப்பது போலவோ, மது குடிப்பது போலவோ எந்தவொரு காட்சியும் இடம்பெறவில்லையாம். மதன் கார்க்கி பாடல் எழுத டி.இமான் இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை! ஜெயம் ரவிக்கா
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி
ஜெயம் ரவி உதயநிதி மோதல்
நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி
புலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions