தனி ஒருவனுக்கு அரவிந்த்சாமி பெரிய பலம்- ஜெயம்ரவி!

Bookmark and Share

தனி ஒருவனுக்கு அரவிந்த்சாமி பெரிய பலம்- ஜெயம்ரவி!

முதன்முதலாக சொந்த கதையில் தனி ஒருவனை உருவாக்கி இயக்கி வெற்றி பெற்றுள்ளார் மோகன்ராஜா. மேலும், இனிமேல் இந்த மாதிரி அதிரடியான படங்களில் தான் நடிப்பேன். இப்படி நடித்து தனி முத்திரை பதிக்கப்போகிறேன் என்று அழுத்தமான கதைகள், கதாபாத்திரங்களை தேடிக்கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி. 

இதற்கிடையே, தனி ஒருவனில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமியின் நடிப்பு குறித்து தான் இப்போது மொத்த கோலிவுட்டின் பேச்சு. பல பிரபல நடிகர் நடிகைகளே அரவிந்த்சாமியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஜெயம்ரவி அரவிந்த்சாமியைப் பற்றி கூறியது, “அவர் என் படத்தில் நடித்ததே பெருமையான விஷயம். ரோஜா படத்தில் இருந்தே அவரது படங்களை நான் ரசித்து வந்தவன். அப்படிப்பட்ட அரவிந்த்சாமி என் படத்திலேயே நடித்தது இன்னும் சந்தோஷமான விஷயம். 

அதோடு, தனி ஒருவனில் அவரது நடிப்பு பிரமாதமாக இருந்தது. படத்துக்கு பெரிய பலமாக அமைந்தது. அந்த வகையில், மற்றவர்களைப்போலவே நானும் அவரது நடிப்பை வெகுவாக ரசித்தேன்” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை! ஜெயம் ரவிக்கா
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி
ஜெயம் ரவி உதயநிதி மோதல்
நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி
புலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions