வெற்றிகரமாக 50-வது நாளை கடந்த தனிஒருவன்!

Bookmark and Share

வெற்றிகரமாக 50-வது நாளை கடந்த  தனிஒருவன்!

படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் அப்படத்தின் வெற்றி மற்றும் வசூலை நிர்ணயிப்பார்கள். அதன் பிறகு ஒரு வாரம் படம் திரையரங்குகளில் ஓடினாலே வெற்றிதான். இந்நிலயில் தனிஒருவருவன் படம் 50வது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டாகியுள்ள தனிஒருவன் படம் இன்றோடு 50வது நாளை எட்டியிருக்கிறது.  அதுவும் தமிழகத்தில் 93 தியேட்டர்களில் இன்றும் திரையிடப்படுகிறது. 

இயக்குநர் மோகன்ராஜா, தனது ட்விட்டரில், “ என்னுடைய டீமுக்கும், படத்தில் நடித்த என்னுடைய இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓர் படம் வெற்றிபெற நல்லக் கதை தான் முக்கியம்” என்று டுவிட் செய்துள்ளார்.

தனிஒருவன் நன்றி விழாவில் மோகன் ராஜாவும், ஜெயம்ரவியும் மேடையிலேயே அழுதனர். அப்போதே படத்திற்கு அவர்களின் உண்மையான உழைப்பு தெரிந்தது. அந்த உழைப்பிற்கான பரிசு தான் தனிஒருவன் வசூல் என்கிறார்கள் ரசிகர்கள்! 

நல்ல கதை என்றுமே பாராட்டும், வெற்றியும் பெறும் என்பதற்கு தனிஒருவன் ஓர் சான்று!


Post your comment





Related News
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை! ஜெயம் ரவிக்கா
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி
ஜெயம் ரவி உதயநிதி மோதல்
நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி
புலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions