அப்பாடக்கர் படத்துக்காக ஜெயம் ரவி, தேவா, விவேக், சூரி பாடிய பாடல்

Bookmark and Share

அப்பாடக்கர் படத்துக்காக ஜெயம் ரவி, தேவா, விவேக், சூரி பாடிய பாடல்

‘அப்பாடக்கர்’ படத்துக்காக, ஜெயம் ரவி, தேவா, சூரி, விவேக் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், வேணுகோபால் இணைந்து தயாரிக்கும் படம், ‘அப்பாடக்கர்’. ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, பிரபு, விவேக், சூரி, கும்கி அஸ்வின் உட்பட பலர் நடிக்கின்றனர்.

சுராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்காக, ஜெயம் ரவி, விவேக், தேவா, சூரி இணைந்து, ‘பல்பு வாங்கிட்டேன் மச்சான் பல்பு வாங்கிட்டேன்’ என்ற பாடலை பாடியுள்ளனர். ‘இது ஜாலியான பாடல்.

படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இந்தப் பாடலும் ஒன்று. சிம்பு, ரம்யா நம்பீசன், இமான் ஆகியோரும் தனித்தனியாக பாடல்களை பாடியுள்ளனர். ‘பல்பு வாங்கிட்டேன்’ பாடலின் ஷூட்டிங்  அடுத்த மாதம் சென்னையில் தொடங்குகிறது. அத்துடன் படம் முடிவடைகிறது.

ஜூன் மாதம் பாடல் வெளியீடு இருக்கும். ஜூலையில் படம் ரிலீஸ் ஆகும்’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions