ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!

Bookmark and Share

ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!

ஜெயம்ரவி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்கள் ரோமியோ ஜூலியட், அப்பாடக்கர். இதில் ரோமியோ ஜூலியட் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா- பூனம் பாஜ்வா இருவரும் நடித்துள்ளனர்.

அந்தவகையில், இதுவரை பாசிட்டிவான வேடங்களாக நடித்து வந்த பூனம்பாஜ்வா முதன்முறையாக இந்த படத்தில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார்.  அதேபோல், சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள அப்பாடக்கர் படத்தில் த்ரிஷா-அஞ்சலி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இதில், த்ரிஷா ஜெயம்ரவியின் காதலியாக நடிக்க, அஞ்சலி அவரது முறைப்பெண்ணாக நடித்திருக்கிறார். ரோமியோ ஜூலியட் சிட்டி கதையில் உருவாக, இந்த அப்பாடக்கர் படமோ பக்கா கிராமத்து கதையில் உருவாகியிருக்கிறது.

என்றாலும், சில பாடல்களை வெளிநாடுகளில் படமாக்கி படத்தின் கலரை மாற்றியுள்ளனர். இந்த இரண்டு ஹீரோயின் படங்களில் நடித்தது பற்றி ஜெயம்ரவி கூறுகையில், என்னைப்பொறுத்தவரை எத்தனை நாயகிகள் என்றாலும் அவரவருக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு நடிப்பேன்.

குறிப்பாக, த்ரிஷா, ஹன்சிகா இருவரும் என்னுடன் ஏற்கனவே நடித்துள்ளனர். அதனால் அவர்களுடன் ரொம்ப ஜாலியாக நடித்தேன். அதேசமயம், அஞ்சலி, பூனம்பாஜ்வாவுடன் அதிக பழக்கம் இல்லாததோடு அவர்களுடன் முதன்முறையாக நடித்ததால் அவர்களது பர்பார்மென்ஸ் பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ப ஈடுகொடுத்து நடித்தேன்.

ஆனால் இரண்டு படங்களிலுமே இரண்டு ஹீரோயினிகளுடன் நடித்தது எப்படி என்றால்? கதைப்படி அது சிரமமான விசயம்தான். ஒரு நடிகையுடன் நமக்கு காதல் இருக்கும். ஆனால் இன்னொரு நடிகையுடன் காதல் இருக்காது. அதனால் அவரிடமிருந்து தப்பிக்க படாதபாடு படவேண்டியிருக்கும். அந்த வகையில் இந்த இரண்டு படங்களுமே நல்ல ஜாலியான காதல் கலாட்டாதான் என்கிறார் ஜெயம்ரவி. 

 


Post your comment





Related News
என் பாடலுக்கு கிடைத்த ஆஸ்கார் விருது இது தான்
சகலகலா வல்லவன் ஆக மாறிய அப்பாடக்கர்
இறுதி கட்டத்தை நெருங்கும் ஜெயம் ரவியின் அப்பாடக்கர்
த்ரிஷாவுக்குத் தொடரும் திருமண அதிர்ஷ்டம்
அப்பாடக்கர் படத்தில் சூரிக்கு முக்கியத்துவம்! கடுப்பான ஜெயம் ரவியின் அப்பா!
பன்றிக் காய்ச்சல் பீதியைக் கிளப்பிய \'அப்பாடக்கர்\' த்ரிஷா
அப்பாடக்கரின் கதை...!
இறுதி கட்டத்தில் அப்பாடக்கர்
பொள்ளாச்சியில் மையம் கொண்டிருக்கும் அப்பாடக்கர் டீம்
ஆக்சன் ஹீரோவான பிரேம்ஜி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions