
அடுக்குமாடி குடியிருப்பாக மாறும் திரையரங்குகளின் பட்டியலில் திருவான்மியூரில் உள்ள ஜெயந்தி திரையரங்கமும் சேர்ந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் சென்னையில் உள்ள பல திரையரங்குகள் அடுக்குமாடி குடியிருப்பாகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றப்பட்டு உள்ளன. ஜெமினி பாலம் அருகில் இருந்த சன், அண்ணா சாலையில் இருந்த வெலிங்டன், அலங்கார், ஆனந்த் என மூடப்பட்ட திரையரங்குகளின் பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததுதான் காரணமாக சொல்லப்படுகிறது.
திருவான்மியூரில் எல்.பி. சாலையில் உள்ள ஜெயந்தி திரையரங்கம் இருக்கும் 14 சென்ட் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒலிம்பியா என்ற கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
சமீபத்தில் நடிகர் சிவாஜி குடும்பத்திற்கு சொந்தமான சாந்தி திரையரங்கத்தை அதிநவீன மல்டி பிளக்ஸாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post your comment