பா.ஜ.வில் சேருகிறார் ஜெயப்பிரதா

Bookmark and Share

பா.ஜ.வில் சேருகிறார் ஜெயப்பிரதா

நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. ஆந்திரத்தை சேர்ந்த ஜெயப்பிரதா சமாஜ்வாடி ஜனதா கட்சியில் சேர்ந்து எம்.பியாக இருந்தார்.

அதன் பிறகு அதிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேருகிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தொண்டராக பணியாற்ற விரும்புகிறேன்.

இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறேன். எனது அரசியல் குரு அமர்சிங் என் சார்பாக பேச்சு நடத்தி வருகிறார். பா.ஜ.கவில் சேர்ந்தாலும், பதவியோ தேர்லில் போட்டியிட வாய்ப்போ கேட்க மாட்டேன்.

மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய இப்போது பாரதிய ஜனதா கட்சியே சரியான பாதை என்பதால் அதனை தேர்வு செய்துள்ளேன். என்கிறார் ஜெயபிரதா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions