முதல் ஷோவை கமலுக்குத்தான் காட்டப்போகிறாராம் ஜெயராம்!

Bookmark and Share

முதல் ஷோவை கமலுக்குத்தான் காட்டப்போகிறாராம் ஜெயராம்!

கமலுடன் தெனாலி உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயராம். அந்த வகையில், அவர்களுக்கிடையே நல்லதொரு நட்பு இருந்து வருகிறது. அதனால்தான், தனது மகன் காளிதாஸை அவர் நாயகனாக நடிக்கும் ஒரு பக்க கதை படத்தின் தொடக்க நாளில் கமலை வைத்து அறிமுகம் செய்தார் ஜெயராம்.

விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கி வரும் இந்த படத்தில் தொடக்க விழா சென்னையில் நடந்தபோது, பாபநாசம் படப்பிடிப்புக்காக நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டிருந்த கமல், ஒருநாள் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னை வந்து காளிதாஸை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து வாழ்த்தினார்.

அதையடுத்து, ஒரு பக்க கதை படப்பிடிப்பு சென்னையிலுள்ள அடையாறில் ஒரு ஊர் போன்ற செட் போடப்பட்டு துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே போஸ்ட் புரடொக்சன்ஸ் வேலைகளும் இன்னொரு பக்கம் நடக்கிறதாம்.

காரணம், படத்தை ஏற்கனவே திட்டமிட்டபடி கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வருகிறார்களாம்.மேலும், இந்த படத்திற்கு முன்பு முருகதாஸ் தயாரிப்பில் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தை கமல் தொடங்கி வைத்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது.

அதனால் அந்த செண்டிமென்ட் தனது மகன் படத்துக்கும் தொடரும் என்று எதிர்பார்க்கும் நடிகர் ஜெயராம், ஒரு பக்க கதை படத்தின் மொத்த பணிகளும் முடிந்ததும், அப்படத்தின் முதல் காட்சியை கமலுக்குத்தான் போட்டுக்காட்ட திட்டமிட்டுள்ளாராம்.

சிறந்த நடிகரான கமல், ஒரு சிறந்த ரசிகரும்கூட. அதனால் அவர் இந்த படத்தின் முதல் காட்சியை பார்ப்பது பெருமையான விசயம் என்று கூறுகிறார் ஜெயராம்.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
100 நடிகைகளுக்கு தாலி கட்டிய கில்லாடி நடிகர் - யார் அது?
பிரபல நடிகரின் சால்ட் & பெப்பர் லுக்கை பார்த்து அசந்த போன அஜித்- என்ன சொன்னார் தெரியுமா?
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
நடிகர் ஜெயராம் மீது பகிரங்க குற்றச்சாட்டு! நடந்தது என்ன
அப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்
கபாலி படத்தை சென்னையில் முதல்நாள் முதல் காட்சி பார்த்த நடிகர் ஜெயராம்!
3 வருடத்தில் 16 பிளாப் - இறங்கு முகத்தில் ஜெயராம்..!
காயப்படுத்தி விட்டார் - ஜெயராம் மீது பிரதாப் பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions