டிவி சீரியலுக்கு கதை எழுதுகிறார் ஜெயராம்..!

Bookmark and Share

டிவி சீரியலுக்கு கதை எழுதுகிறார் ஜெயராம்..!

டைட்டிலை பார்த்ததும் ஜெயராமுக்கு ஏன் இப்படி ஒரு ஆசை என்கிற கேள்வி உங்களுக்குள் எழத்தான் செய்யும். ஆனால் அதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஜெயராம் தற்போது மலையாளத்தில்  நடித்துவரும் படம் 'திங்கள் முதல் வெள்ளி வரை'.. கண்ணன் தாமரக்குளம் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

இந்தப்படத்தின் கதைக்களமே டிவி சீரியலின் பின்னணியில் தான் பின்னப்பட்டுள்ளது. கதாநாயகன் ஜெயராம் மெகா சீரியலுக்கு கதை எழுதும் எழுத்தாளராக இதில் நடிக்கிறார்.

கதாநாயகி ரிமி டாமியோ தினந்தோறும் சீரியல் அத்தனையையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிடும் சீரியல் பைத்தியம் பிடித்த கிராமத்து பொண்ணு. குறிப்பாக ஜெயராம் கதை எழுதும் சீரியல் தான் அவரது பேவரைட்.

இந்த சீரியலை தயாரிப்பவராக நடிக்கிறார் அனூப் மேனன். இவர்கள் மூவருக்குள் ஏற்படும் கலாட்டாக்கள் தான் படத்தின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகி ரிமி டாமி அடிப்படையில் ஒரு பின்னணி பாடகி.. ஏற்கனவே ஐந்து கதைகளை உள்ளடக்கி வெளியான 'அஞ்சு சுந்தரிகள்' படத்தில், ஒரு கதையில் சிறிய ரோலில் நடித்திருந்த இவர்  இந்தப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
100 நடிகைகளுக்கு தாலி கட்டிய கில்லாடி நடிகர் - யார் அது?
பிரபல நடிகரின் சால்ட் & பெப்பர் லுக்கை பார்த்து அசந்த போன அஜித்- என்ன சொன்னார் தெரியுமா?
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
நடிகர் ஜெயராம் மீது பகிரங்க குற்றச்சாட்டு! நடந்தது என்ன
அப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்
கபாலி படத்தை சென்னையில் முதல்நாள் முதல் காட்சி பார்த்த நடிகர் ஜெயராம்!
3 வருடத்தில் 16 பிளாப் - இறங்கு முகத்தில் ஜெயராம்..!
காயப்படுத்தி விட்டார் - ஜெயராம் மீது பிரதாப் பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions