கைதிகளை இசை கலைஞர்களாக்கும் ஜெயராம்

Bookmark and Share

கைதிகளை இசை கலைஞர்களாக்கும் ஜெயராம்

மலையாள நடிகர் ஜெயராமின் இன்னொரு முகம் செண்டை மேள கலைஞர் என்பது. அவரது குடும்பத்தின் பாரம்பரியம் யானை வளர்ப்பும், செண்டைமேளமும் கலந்தது. கேரளாவில் உள்ள தனது வீட்டில் 3 யானைகளை வளர்த்து வரும் ஜெயராம்.

முக்கிய கோவில்களின் விழாக்களுக்கு இலவசமாக தானே சென்று செண்டை மேளம் வாசிப்பது வழக்கம். இந்த நிலையில் ஜெயராமுக்கு கண்ணூர் சிறையிலிருந்து ஒரு கைதி கடிதம் எழுதியிருந்தார்.

அதில் "கண்ணூர் சிறையில் இருக்கும் கைதிகள் செண்டை மேளம் கற்க ஆர்வமா இருக்கிறோம். சிலர் கற்றும் வருகிறோம். சொந்தமாக செண்டை மேளம் இல்லாததால் வாடகைக்கு எடுத்து பயற்சி எடுக்கிறோம்.

இதற்கு சிறை நிர்வாகத்திடம் போதிய பணம் இல்லை. இதனால் எங்கள் பயிற்சி பாதியில் நிற்கிறது. செண்டை மேள கலைஞரான நீங்கள் எங்களுக்கு உதவினால் நாங்களும் செண்டை மேளத்தை கற்போம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

உடனே ஜெயராம் கண்ணூர் சிறை நிர்வாகத்திடம் பேசி தனது செலவில் 11 செண்டை மேளங்களை வாங்கி சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதற்கான எளிய விழா கண்ணூர் சிறைச்சாலையில் நடந்தது. 11 செண்டை மேளங்களின் மதிப்பு 5 லட்சத்துக்கும் கூடுதலாம்.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
100 நடிகைகளுக்கு தாலி கட்டிய கில்லாடி நடிகர் - யார் அது?
பிரபல நடிகரின் சால்ட் & பெப்பர் லுக்கை பார்த்து அசந்த போன அஜித்- என்ன சொன்னார் தெரியுமா?
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
நடிகர் ஜெயராம் மீது பகிரங்க குற்றச்சாட்டு! நடந்தது என்ன
அப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்
கபாலி படத்தை சென்னையில் முதல்நாள் முதல் காட்சி பார்த்த நடிகர் ஜெயராம்!
3 வருடத்தில் 16 பிளாப் - இறங்கு முகத்தில் ஜெயராம்..!
காயப்படுத்தி விட்டார் - ஜெயராம் மீது பிரதாப் பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions