கபாலி படத்தை சென்னையில் முதல்நாள் முதல் காட்சி பார்த்த நடிகர் ஜெயராம்!

Bookmark and Share

கபாலி படத்தை சென்னையில் முதல்நாள் முதல் காட்சி பார்த்த  நடிகர் ஜெயராம்!

ரஜினி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் இன்று உலகம் முழுவதும் ‘கபாலி’ வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை முதல்நாள் முதல் காட்சியே பார்த்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், இன்று சென்னையில் முதல் காட்சி 4.30 மணிக்கு ஒரு சில திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டது.

இந்நிலையில், மலையாள நடிகர் ஜெயராம் இன்று சென்னையில் காசி திரையரங்கில் ‘கபாலி’ படத்தை முதல் காட்சியை ரசிகர்களோடு ரசிகர்களாக பார்த்து ரசித்தார். ஜெயராமின் மகன் காளிதாஸும் தனது அப்பாவுடன் இந்த பாடத்தை பார்த்தார். படம் பார்க்க வந்த ஜெயராம், ‘கபாலி’ படத்தை ரஜினி சாரின் ரசிகராக முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருப்பதாக கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions