காயப்படுத்தி விட்டார் - ஜெயராம் மீது பிரதாப் பாய்ச்சல்

Bookmark and Share

காயப்படுத்தி விட்டார் - ஜெயராம் மீது பிரதாப் பாய்ச்சல்

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் தமிழ், மலையாளத்தில் நடிக்கிறார். படம் இயக்கும் எண்ணத்தில், நடிகர் ஜெயராம் மகன் காளி தாசிடம் கால்ஷீட் கேட்க நினைத்தார். அதற்கு ஜெயராமை தொடர்புகொண்டார்.

கதை கூட கேட்காமல் ஜெயராம் மறுத்துவிட்டாராம். இதைத் தொடர்ந்து ஜெயராம் பெயரை குறிப்பிடாமல், பேஸ்புக் பக்கத்தில், ‘பல குரலில் பேசி வந்த ஒருவரை, என் அண்ணன் ஹரி போத்தன் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 

அவர் இறந்தபோது அஞ்சலி செலுத்தக்கூட வரவில்லை. அந்த நடிகருக்கு நான் கூறுவது இதுதான், தயவுசெய்து மனிதனாக இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள்’ என்று திட்டி எழுதியிருந்தார். பிறகு அதை நீக்கிவிட்டார். 

இதைத் தொடர்ந்து அதுபற்றி  பிரதாப்பிடம் கேட்டபோது, ‘அடுத்த ஆண்டு அக்டோபர் வரை என் மகன் பிசி என்று சொன்னார் ஜெயராம். முதலில் மகன் கதையைக் கேட்கட்டும் என்றேன்.

‘மூத்த இயக்குனர்களுடன் பணியாற்ற காளிதாஸ் விரும்பவில்லை’ என்றார். இதுதான் என்னை காயப்படுத்தி விட்டது. படத்தை நிராகரிக்க இதைவிட வேறு வழிகள் இருக்கிறது. இதனால் எனக்கு காளிதாஸ் மீது வருத்தம் எதுவும் இல்லை. அவரை நான் வாழ்த்துகிறேன்’ என்று சொன்னார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions